காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : வாகனம் தீப்பிடித்ததில் தம்பதி பலி

26 February 2021, 8:44 pm
viruthunager accident - updatenews360
Quick Share

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் கணவன் – மனைவி உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் கற்பகம். இவர்கள் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் குன்னூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜபாளையத்தில் இருந்து தனியார் மில் உரிமையாளர் மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேந்திரன் – கற்பகம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ பிடித்த இருசக்கர வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.மேலும், காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவனை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன் கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 11

0

0