விருதுநகரின் 23வது மாவட்ட ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி இன்று பொறுப்பேற்பு

17 June 2021, 3:01 pm
viruthunager collector - updatenews360
Quick Share

சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையராக பணியாற்றி வந்த ஜெ.மேகநாதரெட்டி  தமிழக அரசின் அரசாணைப்படி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

02.09.2013-ல் இந்திய அரசின் குடிமைப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்டம், மேட்டூரில் டிசம்பர் – 2015 முதல் பிப்ரவரி – 2018-ம் ஆண்டு வரை சார் ஆட்சியராக பணியாற்றினார். பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் – 2018-ம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையாளராக பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 2018 முதல் மார்ச் 2020-ம் ஆண்டு வரை வணிக வரித்துறை இணை ஆணையாளராகவும், மார்ச் – 2020 முதல் மே – 2021-ம் ஆண்டு வரை பெருநகர 2021-ம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநாகராட்சி(பணிகள்) துணை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகவும், செப்டம்பர் – 2020 முதல் மே 2021-ம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநாகராட்சி (பணிகள்) துணை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக இன்று
பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Views: - 131

0

0