கோவையில் ஃபோக்ஸ்வேகன் ‘டைகுன்’ (TAIGUN) காரை அறிமுகப்படுத்தினார்’சகுனி’ நடிகை..!

Author: Udhayakumar Raman
4 September 2021, 4:16 pm
Quick Share

கோவை: கோவையில் ஃபோக்ஸ்வேகன் ‘டைகுன்’ (TAIGUN) காரை சகுனி திரைப்பட நடிகை ப்ரணிதா இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் முன்னோட்டம் நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் மற்றும் சென்னையில் மட்டும் இந்த காரின் முன்னோட்டம் நடைபெற்ற நிலையில் மூன்றாவதாக காரின் அறிமுக நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆஷிஷ் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை ப்ரணிதா கலந்து கொண்டு டைகுன் காரினை வருங்கால வாடிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்பு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதனை தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது:- இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி.டபிள்யூ கார் வகைகளுள் ஒன்றாக இந்த டைகுன் உள்ளது. வரும் 23ம் தேதி இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. பல்வேறு சிறப்பசங்களுடன் ஐந்த வைப்ரண்ட் வண்ணங்களுடன் கார் வெளியாகிறது. காரி விலை விவரங்களும் 23ம் தேதியே வெளியாகும். தென்னிந்தியா எங்களுக்கு பலமான சந்தையாக உள்ளது. இந்தியாவில் எங்கள் நிறுவனம் செய்யும் விற்பனையில் தமிழகத்தில் மட்டும் 16 சதவிதம் உள்ளது. நிச்சயம் இந்த கார் மூலம் இரட்டிப்பு விற்பனையை அடைவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 100

0

0