வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் குறும்பட வாகனம் துவக்கம்

2 March 2021, 5:54 pm
Quick Share

அரியலூர்: அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் குறும்பட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கபட்டு அதற்கான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து செய்யபட்டு வருகிறது. இதனையொட்டி வாக்காளர்கள் நூறு சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிராமிய கலைநிகழ்ச்சிகளினை மாவட்ட ஆட்சியர் ரத்னா இன்று தொடங்கி வைத்தார். இதில் தப்பாட்டம், காவடி ஆட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

மேலும் கிராமங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறையின் கீழ் மின்னணு விளம்பரத்திரை மூலம் குறும்படம் திரையிடபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கபட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாச்சியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 10

0

0