வாக்குபதிவு இயந்திரங்கள் போதுமான அளவு உள்ளது: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேட்டி

3 March 2021, 9:27 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் போதுமான அளவு உள்ளதாகவும், கூடுதலாக காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்தும் வாக்குபதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம் கேவிகுப்பம், அனைக்கட்டு ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் மற்றும் காட்பாடி அரசு சட்டக்கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரி ஆகிய இடங்களில் ஐந்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரடியாக இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இதில் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியாத்தம் கேவிகுப்பமும், காட்பாடி அரசு சட்டகல்லூரியில் காட்பாடி தொகுதியில் பதிவான வாக்குகளும், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வேலூர் அனைக்கட்டு தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்படும் ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த முறை வாக்குசாவடி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கும். அதே போன்று வாக்கு எண்ணும் மையத்தின் அளவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஏற்பாடு முழு வீச்சில் நடந்து வருகிறது. வாக்குபதிவு இயந்திரங்கள் போதுமான அளவு உள்ளது. கூடுதலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்தும் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார்.

Views: - 1

0

0