தனியார் தொழிற்சாலையில் கூலி தொழிலாளி தற்கொலை

22 August 2020, 5:08 pm
Quick Share

திருவள்ளூர்:கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் கூலி தொழிலாளி திடீரென மின்மாற்றியின் மீது ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஜெயின் மெட்டல் ரோலிங் மில்ஸ் என்கிற தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபினஷ்யக்கா (39) என்ற கூலி தொழிலாளி திடீரென அங்குள்ள மின்மாற்றியின் மீது ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டு சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கும்மிடிபூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மன உளைச்சல் காரணமாக மின் மாற்றி மீதுஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி ஒடிசாமாநிலதொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 29

0

0