பொதுமக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வர கோரி வார்டு உறுப்பினர் தர்ணா

3 September 2020, 9:25 pm
Quick Share

விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்க் கூறி இரண்டாவது வார்டு உறுப்பினர் ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன சமீபகாலமாக இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது பொதுமக்களுக்கு பஞ்சாயத்து சார்பாக குடிநீர் வினியோகம் 25 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. ரோசல் பட்டி ஊராட்சியில் உள்ள இரண்டாவது வார்டு தெருக்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களில் 25 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சாயத்து நிர்வாகம் தண்ணீர் விடுவதாகவும்,

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடம் ஒன்றுக்கு 12 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலை உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறி, லாரி கள் மூலமாவது பஞ்சாயத்து நிர்வாகம் தண்ணீர் கொண்டு வந்து பொது மக்களுக்கு தர வேண்டும் என்று இரண்டாவது வார்டு உறுப்பினர் காளிராஜ் என்பவர் தனிநபராக ரோசல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிராஜ் என்பவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மெம்பர் காளிதாஸ் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

Views: - 0

0

0