செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

23 November 2020, 9:47 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து, 5 செல்போன் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை வடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரவிக்குமார். இவர் மாதவரம் பால்பண்ணை ஆவின் கேட் அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் ரவிக்குமாரின் செல்போனை பறித்தூ சென்று தப்பி சென்றனர். இது குறித்து ரவிக்குமார் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ,

விசாரணையில் ஸ்ரீதர் வயது 19, மற்றும் 17 வயதுடைய சிறுவன் என இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து மாதவரம் பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0