தண்ணீர் லாரி பிரேக் டவுன்: ஆனந்த குளியல் போட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்

Author: Udhayakumar Raman
6 August 2021, 2:58 pm
Quick Share

சென்னை வியாசர்பாடி நீர் நிரப்பும் நீர்த்தேக்க நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று தண்ணீரை முழுமையாக நிரப்பிக் கொண்டு பெரம்பூர் முரசொலி மாறன் பார்க் வழியாக ஓட்டேரி நோக்கி சென்றது. அப்போது பெரம்பூர் பாலத்தின் கீழே செல்ல முயற்சி செய்த போது லாரி செல்ல முடியாததால் லாரி பின்னேக்கி வந்தது அப்போது திடீரென்று லாரி பிரேக் டவுன் ஆகி அங்கேயே நின்றது.

அங்கு இருந்தவர்கள் லாரியை எவ்வளவு தள்ளியும் லாரி முழுவதும் தண்ணீர் இருந்ததால் பொதுமக்களால் லாரியை தள்ள முடியவில்லை. இதனால் லாரியில் இருந்த தண்ணியை வெளியேற்ற ஊழியர்கள் முடிவு செய்தனர். லாரியில் இருந்த தண்ணீரை வேகமாக வெளியேற்ற பைப்புகள் மூலம் பீச்சி அடித்தனர் அருகில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வேகமாக ஓடிவந்து ஆனந்த குளியல் போட்டனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்றாலும் வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு குழந்தைகளும் பெண்களும் ஆனந்த குளியல் போடுவதை ரசித்துப் பார்த்தனர்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு லாரி தள்ளி ஸ்டார்ட் செய்து அதன் பிறகு லாரி எடுத்து செல்லப்பட்டது. இதனால் 20 நிமிடங்கள் போக்குவரத்து போலீசார் திக்குமுக்காடினர். பெண்களும் சிறுவர்களும் அருவியில் குளிப்பது போன்று குளித்ததை வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

Views: - 72

0

0