மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் உள்ளோம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

Author: kavin kumar
14 August 2021, 6:56 pm
Quick Share

திருச்சி: கோவிட் மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- திருச்சியில் 20.93லட்சம் நபர்கள் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள தகுதியானவர்கள். இதில் மாவட்டத்தில் இதுவரை 7.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கி உள்ளோம். கோவிட் மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் உள்ளோம். குழந்தைகளுக்கு என்று 100 படுக்கைகள் கொண்ட பிரிவு தயார் படுத்தி உள்ளோம்.

திருச்சி நகரில் உள்ள 20 வார்டுகளில் 103 கி.மீ குடிநீர் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு பஞ்சப்பூரில் 115 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை முன்மொழிந்துள்ளோம். நேற்று சட்ட பேரவையில் அறிவித்துள்ளனர். முறைபடி அதற்கான பணிகள் நடைபெறும். திருச்சியில் 50ல் இருந்து 70 என்கிற அளவில் கடந்த 2 வாரங்களாக கோவிட் பாசிட்டிவ் கேஸ் உள்ளது. திருச்சியில் 7.50 லட்சம் பேர் முதல் தடுப்பூசிகளை போட்டுள்ளனர். ஆனால் இரண்டாவது தவனை தடுப்பூசிகளை 1.5லட்சம் பேர் மட்டுமே போட்டு உள்ளனர்.

முதல் ஊசி செலுத்தி கொண்டவர்களில் ஏறத்தாழ வெறும் 72% பேர் இரண்டாவது தவணை ஊசியை செலுத்தி கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மிக மிக குறைவாக உள்ளது. தடுப்பூசி முகாம்கள் தொடரந்து காலியாக தான் உள்ளது. மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் முக கவசங்களை மக்கள் அணிவதை முற்றிலும் மறந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 162

0

0