“எங்களுக்கு பணமோ பொருளோ வேண்டாம்” : விளம்பரப் பலகையை ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்

Author: Udhayakumar Raman
13 March 2021, 10:28 pm
Quick Share

காஞ்சிபுரம்: “வாக்களிப்பது எங்கள் கடமை, நாங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவோம்”, “எங்களுக்கு பணமோ பொருளோ வேண்டாம்” என வைத்துள்ள விளம்பரப் பலகையை கண்டு மக்கள் ஆச்சரியத்துடன் கடந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் சட்டபேரவை பொதுதேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் என்றலே வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதும் அதனை எதிர்பார்த்தே சிலர் இருப்பதும் அப்பணத்தினை பொருத்தே யாருக்கும் வாக்கு அளிக்கப்படும் என்று முடிவெடுப்பதுமான மனபான்மையுடன் சில வாக்காளர்கள் உள்ளனர்..

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலை கோனேரிகுப்பம் பஞ்சாயத்திற்குட்பட்ட, பகுதியில் ஒருங்கிணைந்த அண்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 800மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல,வாக்களிப்பது எங்கள் ஜனநாயக கடமை என்ற அறிவிப்பு பலகையை குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அந்நகரின் நுழைவு வாயிற் பகுதியில் வைத்துள்ளனர். இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த அறிவிப்புப் பலகையை கண்டு ஆச்சர்யத்துடன் கடந்து செல்கின்றன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிதாக அமைய உள்ள ஆட்சியாளர்கள் எங்களது அடிப்படை தேவைகளான சாலை வசதி,புதைவடிகால் இணைப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தாலே போதும் என்றனர்.வாக்களிப்பது எங்கள் கடமை. நாங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவோம். எங்களுக்கு பணமோ பொருளோ வேண்டாம் என்றனர். மேலும் நம்பிக்கைக்குரிய வேட்பாளருக்கே எங்களது வாக்கு என தெரிவித்தனர். இதேபோல் ஒருங்கிணைந்த அய்யன் திருவள்ளூவர் நகர் குடியிருப்போர் பகுதியிலும் இதேபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Views: - 185

0

0