விவசாயிகளின் தோழன் இருக்கக்கூடிய அதிமுக அரசை ஆதரிக்க வேண்டும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள்

20 September 2020, 3:24 pm
Quick Share

மதுரை: ஏழைகளின் சொத்துகளை அபகரித்த திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டுமா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் உள்ள பசுமலை மகாலட்சுமி மில்ஸ் பணிபுரிந்த 957 தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப்பின் பணிக்கொடை, சம்பளம், போனஸ் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ” பல போராட்டங்களுக்கு பின் மில்லில் பணியாற்றிய தொழிலாளர் 957 பேருக்கு சேர வேண்டிய 2 கோடியே 81 லட்ச ரூபாய் இன்று வழங்கபடுகிறது.

திமுக ஆட்சி காலத்தில் ரவுடிகளின் கூடாரமாக மதுரை இருந்ததாகவும், ஏழைகளின் சொத்துகள் அபகரிக்கபட்டதாக கூறிய அவர், அப்படிப்பட்ட திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு குடும்பத்துக்கு 60 கிலோ அரிசி அரசு வழங்கி வருகிறது. இந்த நாட்டில் கப்பகிழங்கு அறிமுகப்படுத்தியது திமுக அரசு. திமுக காலத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. எனவே விவசாயிகளின் தோழனாக இருக்கக்கூடிய அதிமுக அரசை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.