டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

22 June 2021, 5:31 pm
Quick Share

விருதுநகர்: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் தினந்தோறும் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இளம் வயதினர் குடிக்கு அடிமையாகி சிறுவயதிலேயே இறந்து விடுவதற்கு முக்கிய காரணம் மதுக்கடைகள் தான் என்றும், தமிழகத்தில் கொலை கொள்ளை போன்ற நிகழ்வுகளுக்கும், இந்த மதுக்கடைகள் தான் காரணம் எனவே தமிழகம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனக் கூறியும் , தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதை நிறுத்த வேண்டும் எனவும், மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 94

0

0