குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை நாங்கள் வாங்குவோம்: உறவினர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை

Author: Udhayakumar Raman
2 December 2021, 6:00 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திமுக பிரமுகரை கைது செய்யக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் உடலை இன்று மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டனர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் உள்ள செங்கதிர்சோலை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில்க் ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் மல்லியம்பத்து ஊராட்சியில் உள்ள மயானத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 குற்றவாளிகளான மல்லியம்பத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த கதிர்வேல், வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா சிவக்குமாரை கட்டையால் அடித்து கொலை செய்த பிரபாகரன், தீபக் ஆகியோர் மீது சோமரசன்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீபக் மற்றும் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான முன்னாள் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த கதிர்வேல் மற்றும் வாசன் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரவிமுருகையா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மல்லியம்பத்து திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேலையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் மேலும் மல்லியம்பத்தை ஒன்றியத்தை சேர்ந்த 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள். எனவே, மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய சிவக்குமாரின் உடலை வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இன்று கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Views: - 116

0

0