கள் விடுதலையை கண்டு கொள்ளாமல் போனால் வேட்பாளர்களை களம் இறக்குவோம்: கள் இயக்க தலைவர் நல்லசாமி பேட்டி

28 February 2021, 4:45 pm
Quick Share

தருமபுரி: வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரதான இரு கட்சிகளும் கள் விடுதலையை கண்டு கொள்ளாமல் போனால் இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்குவோம் என கள் இயக்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மது விலக்கு மற்றும் மது கொள்கைகளைப் பற்றி 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்கவில்லை. ஆளும் அதிமுக கட்சி கள்ளுக்கு விடுதலை கொடுத்திருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக அமைந்திருக்கும். திமுக-வின் தேர்தல் அறிக்கையில் கள் விடுதலை பற்றிய அறிவிப்பு இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

இரு கட்சிகளும் கள் விடுதலையை கண்டு கொள்ளாமல் போனால் இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்க பரிசீலனை உள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் கள் இறக்குவோர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும், கல் இறக்குவதும் சந்தைப்படுத்தும் தொடர்ந்து நடைபெறும், தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்த பிறகும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஏற்கனவே அறிவித்தபடி வரும் மார்ச் 13 ஆம் தேதி ஈரோட்டில் மாநாடு நடைபெறும் என தெரிவித்தார்.

Views: - 1

0

0