400 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம்: இந்து முன்னனியினர் அதிரடி முடிவு…

17 August 2020, 9:34 pm
Quick Share

வேலூர்: அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் வேலூர் மாவட்டத்தில் 400 இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவோம் என்றும், இதற்க்காக இந்து முன்னனி அமைப்பினர் சிறை செல்லவும் தாயாராக உள்ளதாக வேலூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்து முன்னனியினர் முடிவு செய்துள்ளார்..

வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குறித்து வேலூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாவட்டம் முழுவதும் உள்ள இந்து முன்னனி அமைப்பினர் மற்றும் விழா குழுவினருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி பிரவேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வித மதம் சார்ந்த விழக்கலுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது வெளியில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனை வேலூர் மாவட்டத்திலும் கடைபிடிக்க உள்ளோம்.

ஆகவே நமது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் எப்படி நமது குடும்பத்தில் விழா கொண்டாடாமல் இருப்போமோ அதை போல கருதி இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து சமூக இடைவெளியுடன் விழா கொண்டாட அரசு அனுமதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார் மாவட்ட ஆட்சியர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனியினர் பேசுகையில், அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் வேலூர் மாவட்டத்தில் 400 இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவோம் என்றும், இதற்க்காக இந்து முன்னனி அமைப்பினர் சிறை செல்லவும் தாயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Views: - 22

0

0