பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா உதவியுடன் இணையதள வெப்சர்வர் மூலம் கண்காணிப்பு: மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்

29 March 2021, 9:57 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில்நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பதற்றமான 613 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா உதவியுடன் இணையதள
வெப்சர்வர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டாக்டர் ஜெ .ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் பொன்னேரி தனி சட்டமன்றதொகுதி தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர் சின்னம் பொருத்தும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்டம் முழுவதும் சுமார் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 98லட்சரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும்,

இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 10 சட்டமன்ற தொகுதிகளில் 4,902 வாக்குசாவடிகள் உள்ளதாகவும், அதில் பதற்றமானதாக 613 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளிட்ட 50 சதவீத வாக்கு சாவடிகளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், வெப்கேமரா உதவியுடன் இணையதள வெப்சர்வர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0