பக்தர்கள் வருகையின்றி களையிழந்த கூடுதுறை…

2 August 2020, 2:09 pm
Quick Share

ஈரோடு: கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் வருகையின்றி கூடுதுறை களையிழந்த காணப்படுகிறது.

ஆண்டு தோறும் ஆடி 18 ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரைகளில் மக்கள் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரியில் முளைப்பாரி விட்டும், படித்துறைகளில் படையலிட்டு காவிரித்தாயை வணங்குவர். ஆடி மாதம் காவிரியில் பொங்கி வரும் புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக இதை கொண்டாடுவர். தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் வரும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன் காரணமாக முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று ஆடிப்பெருக்கு விழா களைஇழந்தது. காசிக்கு இணையாக கருதப்படும் ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி ஆற்றுடன் பவானி நதியும், சங்கமிக்கும் கூடுதுறையில் இந்நாளில் பல லட்சம் பேர் கூடுவர். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு தடை காரணமாக கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பவானி கூடுதுறை வெறிச்சோடி காணப்படுகிறது.. வீடுகளிலேயே மக்கள் ஆடி பெருக்கை கொண்டாடுகின்றனர்.

Views: - 7

0

0