கோவை வழியாக அசாமிற்கு வாராந்திர சிறப்பு ரயில்: நாளை முதல் இயக்க ஏற்பாடு…!!

26 February 2021, 4:36 pm
railway - updatenews360
Quick Share

கோவை: அசாம் மாநிலம் திப்ருகர், கன்னியாகுமரி இடையே நாளை முதல் கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாம் மாநிலம் திப்ருகர், கன்னியாகுமரி இடையே நாளை 27ம் தேதி முதல் கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் திப்ருகர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.

இதேபோல கன்னியாகுமரியில் இருந்து வரும் மார்ச் மாதம் 4ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணிக்கு திப்ருகர் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் நியூ தின் சுகியா, நாகர்காட்டியா, சிமலுகுரி, மரியானி, கவுகாத்தி, கோல்பாரா டவுன், கரக்பூர், கட்டாக், புவனேஷ்வர், விசாகப்பட்டினம், சாமல்கோட், ராஜமத்திரி, எழூரு, விஜயவாடா, நெல்லூர், ரேனிகுன்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 10

0

0