பாஜக சார்பில் நடைபெற்ற வீரவேல் வெற்றிவேல் யாத்திரை

4 March 2021, 3:28 pm
Quick Share

கிருஷ்ணகிரி: பாஜக சார்பில் நடைபெற்ற வீரவேல் வெற்றிவேல் யாத்திரையில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், வீரவேல் வெற்றிவேல் யாத்திரை நடைபெற்றது. கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த யாத்திரை, குப்பம் சாலை வழியாக சென்று புது பேட்டை ஐந்துரோடு இணைப்பு சாலையில் நிறைவு பெற்றது. நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற யாத்திரைக்கு, கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளர் மீசை அர்ஜுனன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் திருமலைபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெம்போ முருகேசன், மன்னன் சிவா, மகளிர் அணி ஜெயலட்சுமி தருமன், பாரதத்தாய், செய்தித் தொடர்பாளர் வேலவன், நகர செயலாளர் ரமேஷ். உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர்கலந்து கொண்டனர்.

Views: - 3

0

0