முன்விரோதம் காரணமாக வெல்டிங் ஒப்பந்ததாரர் குத்திக்கொலை

Author: kavin kumar
21 August 2021, 3:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக வெல்டிங் ஒப்பந்ததாரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் , ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வெல்டிங் ஒப்பந்ததாரர் கண்ணன்(35) தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சாரதி என்பவரிடம் இருந்து வாங்கிய வீட்டில் தற்போது கண்ணன் வசித்து வந்தார். கஷ்டகாலத்தில் விலை குறைவாக பார்த்தசாரதியிடம் இருந்து கண்ணன் வீட்டை வாங்கியதாக அடிக்கடி இருவருக்குமிடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ஏரிக்கரை பகுதி வழியாக வெல்டிங் ஒப்பந்ததாரர்
கண்ணன் சென்று கொண்டிருந்த போது அங்கு இருந்த பார்த்தசாரதி மறைத்து வைத்து இருந்த கத்தியால் கண்ணனின் கழுத்தில் சராமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கண்ணனை மீட்டு அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் கிளையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்னன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த வில்லியனூர் போலீசார் தப்பி ஓடிய கொளையாளி பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.

Views: - 343

0

0