கோவை மாநகராட்சியின் வரவு செலவு என்ன? : 2020-21 நிதிநிலை அறிக்கை வெளியீடு..!

26 February 2021, 7:23 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சியின் 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-2021 நிதி ஆண்டுக்கான கோவை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி , மாநகராட்சியின் மொத்த வரவு, செலவினங்கள் பின்வருமாறு:- கடந்த நிதியாண்டில், மாநகராட்சிக்கு வருவாய் வரவினமாக ரூ.860.39 கோடியும், மூலதன வரவினமாக ரூ.1,769 கோடியும் என மொத்தம் ரூ.2,630 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.மேலும், வருவாய் செலவினமாக ரூ.866 கோடியும், மூலதன செலவினமாக ரூ.1,762 கோடியும் என மொத்தம் ரூ.2,629 கோடி செலவாகியுள்ளது. உபரி நிதியாக ரூ.1.4 கோடி இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 3

0

0