போலீசாரை மிரட்டி சமூகவலைதளத்தில் வாட்ஸ்அப் வீடியோ: பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

26 November 2020, 6:31 pm
Quick Share

கன்னியாகுமரி: போலீசாரை மிரட்டி சமூகவலைதளத்தில் வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்ட பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
குமரி குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .எனினும் புதிது புதிதாக கஞ்சா வியாபாரிகள் முளைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கஞ்சா வியாபாரிகள் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறார் .அந்த வகையில் பல வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தண்டநாயகன் கோணம் பகுதியை சேர்ந்த அந்தோணி (46) என்பவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை உட்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ்பி பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அந்தோணியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவரை தொடர்ந்து நாகர்கோவில் சிறையில் இருந்த அந்தோணி அங்கிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை ஒருமுறை போலீசார் கைது செய்வதற்காக வீட்டிற்கு சென்றபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து மிரட்டியதுடன் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் இவர் பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0