திமுக அளித்த வாக்குறுதி எங்கே : திருவள்ளூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்!!

Author: Udhayakumar Raman
28 July 2021, 1:21 pm
Admk Protest - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பொன்னேரியில் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி திட்டங்களை செயல்படாததை கண்டித்து அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் அண்ணா சிலை முன்பாக மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைகளில் பதாகைகளை ஏந்தி பொய்யான வாக்குறுதி அளித்து திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ள திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 98

0

0