கணவரின் உயிரிழப்பு காரணமான மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி

2 November 2020, 5:24 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் உயிரிழக்க காரணமான திருநின்றவூர் தனியார் நர்சிங் ஹோம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்தவரின் மனைவி ஆட்சியர் வளாகம் முன் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் விரை வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பணம் கட்ட சொல்லி கணவரையும், என்னையும் தகாத வார்த்தையால் சாதிப்பெயரை சொல்லி மிகக்கேவலமாக மருத்துவமனை நிர்வாகிகள் பேசியது, மட்டுமில்லாமல் ஜூன் 15-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பியதால் மருத்துவமனை நிர்வாகத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில்,

அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு மருந்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கொடுத்திருப்பதால் அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 27ம் தேதி உயிரிழந்தர். இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க முயற்சி செய்தபோது அவரை போலீசார் தடுத்திநிறுத்தி பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Views: - 13

0

0