கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றி : உயிருடன் மீட்ட வனத்துறை!!

Author: Udayachandran
2 October 2020, 3:51 pm
Wild Pig Rescue - updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே BLACK THUNDER தீம் பார்க்கில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த காட்டுப் பன்றியை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகம், ஜக்கனாரி சுற்றுக்கு அருகிலுள்ள பிளாக் தண்டர் ரிசார்ட்டின் கிணற்றில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு பன்றி விழுந்ததாக வந்த வனத்துறையினருக்க தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று , கிணறு ஆழமாக இருந்ததால், இதுகுறித்து தீயணைப்புத் துறை உதவியுடன், மேட்டுப்பாளையம் பிரிவு வனவர் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் இணைந்து, காட்டு பன்றியை மீட்டனர். பின்னர் அந்த காட்டு பன்றியை அருகிலிருந்த ஓடந்துறை வனப்பகுதியில் விடப்பட்டது.

Views: - 45

0

0