குடியிருப்புக்குள் வாக்கிங் வரும் காட்டு எருமை…கோத்தகிரி பொதுமக்கள் பீதி!

Author: kavin kumar
9 August 2021, 2:52 pm
Quick Share

நீலகிரி: கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் காட்டு எருமை உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு எருமைகள் அதிகமாக குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன. தற்போது கடந்த 10 நாட்கள் முன்பு காட்டு எருமை ஒன்று கழுத்தில் கயிறு மாட்டி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் பின்பு வனத்துறையினர் தொடர்ந்து காட்டு எருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர் பின்பு அணையட்டி பகுதியில் காட்டெருமை இருப்பதாக தகவல் அறிந்து கயிறை அவிழ்த்துவிட மாவட்ட வனக் காப்பாளர் குருசாமி தபேலா ,வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டு பின்பு காட்டெருமையை கயிற்றை அவிழ்த்துவிட்டு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு காட்டு எருமை மூன்று மணி நேரம் தேயிலை தோட்டத்தில் உலா வந்த வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை கண்காணித்து வருகின்றனர் .

Views: - 122

0

0