தமிழக-கேரள எல்லையில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள்: கண்டு களிக்கும் சுற்றுலா பயணிகள்.!!

Author: Aarthi Sivakumar
6 August 2021, 5:07 pm
Quick Share

கோவை: வால்பாறையில் கேரள எல்லையில் ஓய்வு எடுத்து வந்த காட்டுயானைகளை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கேரள வனப்பகுதியியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம்பெயர்ந்து தமிழக வனப்பகுதியில் நுழைந்து குறிப்பிட்ட சிலமாதங்கள் தமிழகத்திலேயே முகாமிட்டு உலாவி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் பாதையில் இந்த ஆண்டு அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மளுக்கப்பாறையிலிருந்து பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் ஓய்வு எடுத்தபடி படுத்து தூங்கிக்கொண்டிருந்தன. இதனை அவ்வழியாக சுற்றுலா பயணிகள் பார்த்து தங்களுடைய செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது யானைகள் உறங்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே வைரலாகி வருகிறது.

Views: - 216

0

0