தனியார் வங்கியில் 74 ஆயிரம் திருடி சென்ற பெண் கைது

1 December 2020, 7:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தனியார் வங்கியில் 74 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் தனியார் வங்கி (IDFC) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த மாதம் 10ஆம் தேதி வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையை கேசியர் எண்ணி தனியாக ஒரு பெட்டியில் வைத்து விட்டு வேறு வேலையாக சென்றார். மீண்டும் திரும்ப வந்து பெட்டியை பார்த்த போது அதிலிருந்த ₹74 ஆயிரத்தை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் போரில் போலீசார் வங்கிக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கேசியர் அருகில் நின்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்து, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர், கேசியர் அங்கிருந்து நகர்ந்த பிறகு, திருடி சென்றதை கண்டறிந்தனர். இதையடுத்து செல்வியை கைது செய்து அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர் நீறுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0