தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற பெண்: பாதிக்கப்பட்ட பெண்ணை விடுதலை செய்த காவல் கண்காணிப்பாளர்

15 July 2021, 6:29 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற வழக்கில் தற்காப்பிற்காக கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து பிரிவு 100 ன் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெண்ணை விடுதலை செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வழுதிகை மேடு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணையில் தங்கி வேலைப்பார்த்து வந்த திருவாலங்காடு பகுதியைச் சார்ந்த பூங்காவனம் என்பவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் கடந்த 14ஆம் தேதி வேலையை முடித்து விட்டு இரவில் தனியாக உறங்கிக்கொண்டு இருந்தபோது, அப்போது அவ்வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர் அமுதாவிடம் தவறாக நடக்க முயன்ற போது, சத்தம் கேட்டு எழுந்த அமுதாவின் கணவர் பூங்காவனம் ஆத்திரத்தில் அடையாளம் தெரியாத அந்த நபரை அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஏரிக் கரையை ஒட்டிய பகுதியில் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில்தகவலறிந்து வந்த மீஞ்சூர் போலீசார்,

உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மீன் பண்ணையில் வேலை பார்த்த பூங்காவனம் மற்றும் அவரது மனைவி அமுதாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட நபரை கணவன் அடித்து கொலை செய்து ஏரிக்கரையில் உடலை போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும் பிரேத பரிசோதனைக்கு பின்,

உடல் அடையாளம் காணப்பட்ட பின்னரே கொலைக்கான முழு விவரங்களும் தெரிய வரும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்திருந்த நிலையில், கணவன் மனைவி இருவரிடமும் நடைபெற்ற தீவிர விசாரணையில், அமுதா தன்னை தற்காத்துக்கொள்ள அவரை அடித்து கொலை செய்ததும், அவருக்கு 2 குழந்தைகள் உள்ளதால் அவர்களின் நலன் கருதியும் சட்டப்பிரிவு 100ன் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவரை விடுதலை செய்தார். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 42

0

0