பட்டப்பகலில் நடுத்தர வயது பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

8 September 2020, 7:58 pm
Quick Share

கரூர்: கரூரில் பட்டப்பகலில் நடுத்தர வயது பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் நகர மையப்பகுதியான பழைய ரயில் நிலைய சந்திப்பு அருகில் ரயில் நிலைய அலுவலர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் இன்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சாலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு திடீரென தீ வைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடி அலறி ஓடி கீழே சாய்ந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் ஏன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடுத்தர வயது பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 9

0

0