வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தற்கொலை!!

27 August 2020, 6:07 pm
woman Suicide - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்டதால் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தினை சேர்ந்தவர் மாரிப்பாண்டி. இவரது மனைவி ராமலெட்சுமி(வயது 56). மாரிப்பாண்டிக்கு ராமலெட்சுமி 2வது மனைவி, முதல் மனைவி இறந்து விட பின்னர் ராமலெட்சுமியை 2வதுதாக திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவிக்கு 3 பெண்கள் மற்றும் ராமலெட்சுமிக்கு ஒரு மகன் என மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாரிப்பாண்டி மற்றும் ராமலெட்சுமி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

மாரிப்பாண்டிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் வேலைக்கு செல்லமுடியமால் வீட்டில் இருந்து வருகிறார். ராமலெட்சுமி மட்டும் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தனர். கணவர் மாரிப்பாண்டி சிகிச்சைக்காக ராமலெட்சுமி சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் கடனுக்கு வட்டி கொடுக்க முடியமாலும், மகளிர் குழுவில் வாங்கிய கடனை செலுத்த முடியமால் ராமலெட்சுமி தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இன்று வெளியில் விறகு எடுத்து வருவதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ராமலெட்சுமி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக தொங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு, கடனை அடைக்க முடியமால் ராமலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதது அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 9

0

0