தவறான சிகிச்சையால் பார்வை இழந்த பெண்; இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

23 November 2020, 6:19 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தவறான சிகிச்சையால் பார்வை பறிபோன பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி பாதிகாபட்ட பெண் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

நாகர்கோவில் அருகே கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் ரெஜிலா பாக்கிய ஜோதி (49). இவருக்கு  கடந்த மாதம்  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரதீஷ் என்பவரின்  (எஸ்.ஆர்.எம்.) மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு  ரதீஷ் என்பவர் அந்த பெண்ணிற்கு  சுமார் 20 நாட்கள் சிகிச்சை அளித்துள்ளார். தவறான சிகிச்சை காரணமாக  உடல்நிலை  மோசமானதுடன் கண்கள் இரண்டும் வீங்கியதுடன் பார்வையும் குறைந்து வந்துள்ளது. இதில்  அச்சமடைந்த பெண்ணின் கணவர் சிகிச்சை அளித்த ரதீஷிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. 

இதனால் பெண்ணை  நாகர்கோயில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே  பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்துள்ளதால் பார்வை பறிபோய் உள்ளது என்றும், உடனடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளார்கள். இதனை  அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணிற்கு  பார்வை இழந்து வீங்கி இருந்த ஒரு  கண் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. தற்பொழுது மற்றொரு கண் பார்வை இழந்துவிட்டது. 

இந்நிலையில் இன்று ரெஜிலா தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனக்கு கண் பார்வை பறி போக காரணமாக இருந்த போலி மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் மருத்துவமனைகளில் செலவு செய்த ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Views: - 18

0

0