கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…

13 August 2020, 8:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்யகோரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பெண்கள் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பஜனை மடம் வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு
கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடியது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்ககோரி அப்பகுதி பெண்கள் 10க்கும் மேற்பட்டோர். புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள் அவர்களின் புகாரை வாங்க மறுத்து அவர்களை அலக்கழித்துள்ளனர்.

இதனிடையை இது குறித்து தகவலறிந்த தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து தொகுதி பெண்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் குறித்து தகவலறிந்த வந்த உதவி பொறியாளர் சவுந்தரராஜன் சட்டமன்ற உறுப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Views: - 12

0

0