யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன்: கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் தற்கொலை

21 July 2021, 6:56 pm
Quick Share

சென்னை: நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன், யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன் என கணவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் கே.எம்.பி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலா. இவர் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சீர்காழியை சேர்ந்த அமிர்தவல்லி என்ற பெண்ணுடன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. கௌதம் கண்ணன் என்ற மகன் உள்ளான். மாமியார் மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார் அமிர்தவல்லி. இது பிடிக்கமால் தனிக் குடித்தனம் செல்ல கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பாலாவிற்கு செல்போனில் மெஸேஜ் அனுப்பி உள்ளார். அதில் நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலா வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்ததில் அமிர்தவல்லி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 4 வருடம் ஆன நிலையில் இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Views: - 41

0

0