டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கைவரிசையை காட்டிய பெண்கள்: ஆதாரத்துடன் உரிமையாளர் புகார்

Author: kavin kumar
2 October 2021, 2:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் 2 பெண்கள் பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

புதுச்சேரி கடலூர் செல்லும் சாலையில் உள்ள நயினார் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது ஜி எஸ் என்கிற தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோர். இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள பொருட்களை கணக்கெடுக்கும் போது ஹார்லிக்ஸ் பூஸ்ட் மற்றும் சில பொருட்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த ஊழியர்கள் கடையின் உரிமையாளரிடம் இது குறித்து தெரிவித்ததை அடுத்து அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்குள் வந்த 2 பெண்கள் ஹார்லிக்ஸ் பூஸ்ட் டப்பாகள் மற்றும் சில பொருட்களை தங்களது புடவைக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது, இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Views: - 276

0

0