தனியார் விடுதியில் தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை…

Author: kavin kumar
28 August 2021, 7:56 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் கென்னட்டு ஜவான் மகன் லென்ட் பிராங்கிளின் 39. இவர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 22ந் தேதியிலிருந்து அறை எடுத்து தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வந்து அறையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இன்று அறையில் மூக்கில், வாயில் ரத்தம் வழிந்த நிலையில் லென்ட் பிராங்கிளின் இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்ட விடுதி ஊழியர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 207

0

0