தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

Author: Udayaraman
27 July 2021, 5:24 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை அடுத்த மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே மருங்குளம் கிராமத்தில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நர்சரி பண்ணை உள்ளது. இங்கு மருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தோழப்பன் (வயது 55 ) என்பவர் நிரந்தர பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலைபார்த்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் தோழப்பன் பிணமாக மிதந்தார். இதனை அங்கு வேலைக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தோழப்பனின் உடலை பார்வையிட்டு கொலையா என விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 123

0

0