பள்ளம் தோண்டும் பணியின் போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளி: உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

14 May 2021, 10:39 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டும் பணியின் போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளியை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன்நகர் மாநகராட்சிக்கு உட்பட்ட 63வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பைப்லைன் பதிப்பும் பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஆத்தூரை சேர்ந்த கைலாசம் (50) என்பவர் குழிக்குள் இறங்கியபோது பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து கைலாசபதியை மூடியது. பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் கைலாசத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர் மீது அதிக அளவில் விழுந்ததால் அவரை மீட்க முடியாமல் திணறினர். இது குறித்து திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மண்ணில் புதைந்து சிக்கியிருந்த கைலாசத்தை உயிருடன் மீட்டனர். இதனை தொடர்ந்து கைலாசத்தை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 31

0

0