சுமார் 10 டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை

25 November 2020, 7:24 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வாலிபர் ஒருவர் கயிற்றைக் கட்டி சுமார் 10 டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள  தாமரைகுட்டிவிளை ஊரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ஏற்கனவே லாரியை கயிற்றால் தனது உடம்பில் கட்டி 25 மீட்டர் தூரம் வரை  இழுத்து பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்துள்ளார். பொதுவாக லாரியை கயிற்றில் கட்டி இருப்பவர்கள் முதுகுப்பகுதியில் இருபுறமும் கையை கட்டி இழுப்பது தான் வழக்கம். ஆனால் கண்ணண் வயிற்றை கயிரால் கட்டி இடுப்பில் சுற்றி அதனை இழுத்து சாதனை புரிந்துள்ளார்.

உலக அளவில் இது போன்று வேறு யாரும் இந்த சாதனையை செய்தது கிடையாது. இன்று அவர் 9.5 டன் எடையுள்ள லாரியை கால் சக்தி கொண்டு 90 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சாதனை படைத்துள்ளார். இதனை சோழன் உலக புக் ஆஃ ரெக்கார்டு நடுவர்கள் வந்து ஆய்வுசெய்து அவருக்கு அங்கீகாரம் அளித்தநர். இதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.

Views: - 2

0

0