தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக வன உயிரின வார விழா

Author: kavin kumar
3 October 2021, 2:52 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நடைபெற்ற உலக வன உயிரின வார விழாவில் மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் திருச்சி வன மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி வனக்கோட்டத்தில் உலக வன உயிரின வார விழாவில் மிதிவண்டி பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன், உதவி வனப்பாது காவலர்கள் நாகையா, சம்பத்குமார், சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வன உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு புகைவண்டி நிலையம் மற்றும் தலைமை தபால் நிலையம் வழியாக பிஷப் ஹீபர் கல்லூரி சென்றடைந்தது. கல்லூரியில் மாணவர்களுக்கு வன விலங்குகள் பற்றிய விழிப்புணர்வு
புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 175

0

0