தேசியக்கொடியை ஏற்றுவதில் காங்கிரஸ் இடையே கோஷ்டி மோதல்: நான்தான் ஏற்றுவேன் என்று இரண்டு கோஷ்டி தலைவர்கள் கை பிடித்துக் கொண்டதால் பரபரப்பு

Author: kavin kumar
15 August 2021, 4:52 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தேசியக்கொடியை ஏற்றுவதில் காங்கிரஸ் இடையே கோஷ்டி மோதல், நான்தான் ஏற்றுவேன் என்று இரண்டு கோஷ்டி தலைவர்கள் கை பிடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் பல்வேறு கோஷ்டிகள் ஆக உள்ளது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவராக உள்ள நிலையில், நகர தலைவர் ராமானுஜம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு கோஷ்டி ஒன்றும், முன்னாள் நகர தலைவர் செல்வம் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை சுதந்திர தின பூங்காவில் காங்கிரஸ் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

50க்கும் குறைவான காங்கிரஸார் குழுமியிருந்த அந்த நிகழ்ச்சியில் ராமானுஜம் ஆதரவு கோஷ்டி மற்றும் செல்வம் ஆதரவு கோஷ்டியினர் கொடியேற்றுவது யாரென்று தகராறில் ஈடுபட்டனர். நான்தான் ஏற்றுவேன் நான்தான் ஏற்றுவேன் என்று இரண்டு பேரும் கொடிக்கயிறை மாறிமாறி பிடித்துக் கொண்டதால் பார்க்கும் பொது மக்களுக்கு நகைப்புக்கு இடம் ஆகியது. இதனைத் தொடர்ந்து விட்டுக்கொடுத்த நகர தலைவர் ராமானுஜம் மரியாதை இல்லை இருந்தாலும் முன்னாள் தலைவர் கொடி ஏற்றுவார் என்று கூறினார். ஆட்கள் குறைவு ஆனால் கோஸ்டி அதிகம் என்பதை காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்று பார்வையாளர்கள் நகைத்தவாரே சென்றனர்.

Views: - 157

0

0