காதல் திருமணம் செய்த இளம்ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம்…!
Author: kavin kumar27 August 2021, 6:57 pm
தருமபுரி: தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளம்ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் புழுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகா. தர்மபுரி அரசு கல்லூரியில் பிசிஏ 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர், கல்லூரியில் உடன் பன்னீர் செல்வம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், மகாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் வேறு நபருடன் திருணமத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இதனை அறிந்த மகா, வீட்டில் இருந்து வெளியேறி கடந்த 20ஆம் தேதி கொல்லாபுரியம்மன் கோவிலில் பன்னீர்செல்வத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், திருமணத்திற்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், தங்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகா, கணவர் பன்னீர்செல்வம் தர்மபுரி பி1 காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனை அடுத்து, அவர்களது புகாரின் பேரில் போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
0
0