குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

27 November 2020, 9:47 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கான்சாபுரம் – அத்திக்கோவில் செல்லும் சாலையில் காலனி பகுதியில் வசித்து வந்த தங்கேஸ்வரன் வனலட்சுமி தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த வனலட்சுமி வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு மகேஸ்வரன் என்ற 3 வயது மகன் உள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.

Views: - 16

0

0