மூதாட்டியை எரித்துக் கொலை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Author: Udhayakumar Raman
7 September 2021, 11:03 pm
Quick Share

கள்ளக்குறிச்சி:மணலூர்பேட்டை அருகே மூதாட்டியை எரித்துக் கொலை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி மனைவி பார்வதி, மூத்த மகன் தங்கராஜ் இறந்துள்ளார். இந்த கவலையில் இருந்த நிலையில் மன அமைதிக்காக சடைகட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலுக்கு பார்வதி அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது நெடுக்கம்பட்டு அருள் சகாயம் பழக்கம் ஆகி உள்ளார். 13.7.21ஆம் தேதி அருள் சகாயம் பார்வதியை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பாடி கிராமத்தில் ஜோசியம் பார்க்க அழைத்துச் சென்று மூன்று மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார்.

மீண்டும் பார்வதி சடைகட்டி முனியப்பன் கோவில் சென்று உள்ளார். அங்கு வந்த விஜய் பார்வதியை இருசக்கர சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சொரையப்பட்டு கிராமம் வந்து விஜய் அருள் சகாயம் சேர்ந்து பார்வதியிடம் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி மூன்று பேரும் சொரையப்பட்டு கிராமத்தின் வழியாக சென்று காப்புக்காடு உள்ளே அழைத்துச் சென்று சம்பவ இடத்தில் இறக்கி பார்வதி கால் வலிப்பதாக கூறி உட்கார்ந்த நபரை அருள், சகாயம், பார்வதியின் மாராப்பு துணியை முகத்தில் வைத்து அழுத்தி மூச்சு திணற வைத்து சாக அடித்ததாகவும், பின்பு பார்வதி அணிந்திருந்த நகைகளை கழட்டிக் கொண்டும் விஜய் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை வாட்டர் பாட்டில் பிடித்து பார்வதி மீது தெளித்து விஜய் சிகரெட் பிடிக்க பயன்படுத்திய தீப்பெட்டியில் பார்வதி மீது எரித்துள்ளார்.

அங்கிருந்து சென்ற வழியாகவே திரும்பவும் விஜயும் அருள் சகாயமும் நெடுங்கம்பட்டு அருள் சகாயம் வீட்டுக்கு சென்று இருவரும் நகையை பங்கு பிரித்துள்ளனர். மேற்படி இருவரையும் 06-8-21-தேதி திருக்கோவிலூர் காவல் வட்ட ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரில் அருள் சகாயம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ். பி ஜியாவுல் ஹக் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அருள் சகாயத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Views: - 100

0

0