நகைக்காக இளம்பெண்ணை கொன்ற இளைஞர்: குற்றவாளியை 18 மணி நேரத்தில் பிடித்த காவலர் துறையினர்

26 January 2021, 8:15 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் நகைக்காக இளம்பெண்ணை கொன்ற குற்றவாளியை 18 மணி நேரத்தில் காவலர் துறையினர் பிடித்தனர்.

ஈரோடு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஏபிடி சாலையில் நேற்று பட்டப்பகலில் இளம்பெணை கழுத்து அறுத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது‌. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் மோப்ப நாய் வீரா மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த ரேகா என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த ஆர்.என் புதூரை சேர்ந்த செந்தில்குமார். இவர் ரேகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த செந்தில்குமார் , ரேகாவின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுன் தங்க செயினை கொள்ளையடித்து சென்றுள்ளான்‌. இந்நிலையில் தனிப்படையினரின் வாகன சோதனையில் செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் இருச்சக்கர வாகனம் மீட்கப்பட்டது.

குற்றவாளியை 18 மணிநேரத்தில் பிடித்து காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Views: - 0

0

0