உப்பு வியாபாரம் செய்ய சென்ற இளைஞர் “மர்ம மரணம்“ : துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்!!

20 November 2020, 2:08 pm
Kanchi Dead Body - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அருகே உள்ள கால்வாயில் இளைஞர் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஏ.பி.சத்திரம் குளத்தங்கரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் நாராயணன்(வயது, 24).இவர் உப்பு வியாபாரம் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வராததால் நாராயணனை அவர் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரிக்கு செல்லும் நீர்வரத்து மடுவுக்கு செல்கின்ற கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசாருக்கு நாராயணன் தந்தை சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கன மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நாராயணன் சிக்கி உயிரிழந்தரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் இது குறித்து உறுதியான தகவல் கூறமுடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Views: - 0

0

0