அரசு பேருந்து மோதி இளம் பெண் உயிரிழப்பு

5 November 2020, 10:06 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே அரசு பேருந்து மோதி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பாடியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி , தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருபவர் மிஸ்ஜா (26). வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் வேலூரில் உள்ள நிலையில் , மிஸ்ஜா பணிக்கு வேலைக்கு செல்லும் போது ஐ.சி. எப், ரயில்வே காலனி அருகே அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மிஸ்ஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சுந்தரராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 18

0

0