குழித்துறையில் போலீஸ் வேடம் அணிந்து வசூலில் ஈடுபட்ட வாலிபர் கைது

17 November 2020, 3:15 pm
Quick Share

கன்னியாகுமரி: குழித்துறையில் போலீஸ் வேடம் அணிந்து வசூலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று ஒரு வாலிபர் காக்கி சீருடையில் சொகுசு காரில் வந்தார் .அவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அந்த வழியாக ஹெல்மெட் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவரது செய்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்த அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர் .விசாரணையில் அவர் வன்னியூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் என்பதும் , திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்ப்பது தெரிந்தது.


இதனையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் வாலிபர் வந்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது .அந்த வாலிபர் இதுபோல் வேறு எங்காவது வசூல் வேட்டையில் ஈடுபட்டாரா? கைப்பற்றப்பட்ட சொகுசு கார் அவருடையதா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 11

0

0