விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

1 December 2020, 9:54 pm
Quick Share

கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை மிக கொடூரமாக தாக்கி வரும் காவல்துறையினரைக் கண்டித்தும், விவசாயிகளோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர், இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 17

0

0